Pages

Friday, April 16, 2010

தரவும் தகவலும்(Data & Information)

தரவு(Data)
தரவு என்பது கணினிக்கு உள்ளீடாக வழங்கப்படுகின்ற ஒழுங்குபடுத்தக்கூடிய நிலையில் காணப்படும் நிகழ்வுகளும் அவதானங்களுமாகும். இவை எழுத்துக்களாகவோ இலக்கங்களாகவோ அல்லது படங்கள்,சத்தங்கள்,அடையாளண்களாக அமையலாம்.


தகவல்(Information)
கணினிக்கு உள்ளீடாக வழங்கப்படுகின்ற தரவின்மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தல், நிரற்படுத்தல், செய்முறைக்கு உட்படுத்தல் போன்றவற்றின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற செய்தி அல்லது உள்ளடக்கம் தகவல் எனப்படும்.

தரவானது தகவலாகப்பரிணமிக்கும் முறை

தரவிற்கும் தகவலிற்கும் இடையில் ஒழுங்குபடுத்தல், நிரற்படுத்தல், செய்முறைக்கு உட்படுத்தல் முதலியன உள்ளடங்கலான செயற்பாடு(Processing) நடைபெறுகின்றது. இதன் நிமித்தமே தரவானது தகவலாக மாற்றப்படுகின்றது.
இதனைப் பின்வரும் வரிப்படம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment