எனது இத்தளத்தைப்பற்றிச் சில...

எனது இந்த முயற்சியானது தரம் 10,11மற்றும்12,13 வகுபபுக்களில் ICT மற்றும் GIT பாடங்களைக் கற்கின்ற மாணவர்களுக்கும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் முழுமையான பயன் பெறுவதற்காகும்.மற்றும் தமது சந்தேகங்கள் மேலதிக தேவைகள் முதலியவற்றை எம்மோடு பரிமாறி பயன்பெறக்கூடிய வகையிலும் இம்முயற்சி உதவக்கூடியது என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் இத்தளத்தினை முழுமையாக நீங்கள் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்துத் தேவை ஏற்படின் தரப்பட்ட இணைப்பினைப் பயன்படுத்தி Bamini அல்லது Latha எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பார்வையிடலாம்.
நன்றி

இன்று

*** Grade 10 & O/L ICT Classes Available Click for Application form தரம் 10 மற்றும் O/L வகுப்புக்கள் ஆரம்பம்.விண்ணப்பங்களுக்கு இங்கே click செய்க *** GCE(O/L) Marking Scheme 2009 *** GCE(O/L) Marking Scheme 2010***GCE(O/L) Marking Scheme 2011***GCE(O/L) Marking Scheme 2012

Sunday, April 18, 2010

ICT யில் தமிழ்ச்சொற்கள் - 1

absolute address————————>தனி முகவரி
absolute cell address ——————>தனித்த நுண்ணறை முகவரி வழங்கல்
access ————————>அணுக்கம், அணுகல்
accuracy ————————>துல்லியம்
action ————————>செயல்
active cell ————————>இயங்கு கலன்
address modification ————————>முகவரி மாற்றம்
address ————————>முகவரி
addressing ————————>முகவரியிடல்

Friday, April 16, 2010

தரவும் தகவலும்(Data & Information)

தரவு(Data)
தரவு என்பது கணினிக்கு உள்ளீடாக வழங்கப்படுகின்ற ஒழுங்குபடுத்தக்கூடிய நிலையில் காணப்படும் நிகழ்வுகளும் அவதானங்களுமாகும். இவை எழுத்துக்களாகவோ இலக்கங்களாகவோ அல்லது படங்கள்,சத்தங்கள்,அடையாளண்களாக அமையலாம்.


தகவல்(Information)
கணினிக்கு உள்ளீடாக வழங்கப்படுகின்ற தரவின்மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தல், நிரற்படுத்தல், செய்முறைக்கு உட்படுத்தல் போன்றவற்றின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற செய்தி அல்லது உள்ளடக்கம் தகவல் எனப்படும்.

தரவானது தகவலாகப்பரிணமிக்கும் முறை

தரவிற்கும் தகவலிற்கும் இடையில் ஒழுங்குபடுத்தல், நிரற்படுத்தல், செய்முறைக்கு உட்படுத்தல் முதலியன உள்ளடங்கலான செயற்பாடு(Processing) நடைபெறுகின்றது. இதன் நிமித்தமே தரவானது தகவலாக மாற்றப்படுகின்றது.
இதனைப் பின்வரும் வரிப்படம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

ICT In Society

GIT Syllabus

1.IT Fundamentals.
2.Mathematics.
3.Information System and IT.
4.Computer Programming.
5.Use of Computer Software.
6.IT and National Development.

ICT Syllabus For Grade 10 & 11

1.Fundamentals of ICT.
2.Data Representation and Internal Operations of the Computer.
3.Generic Software.
4.Information System.
5.Programming Concept.
6.Web page Development.
7.ICT and Society.
8.Group Project.

எனது இந்த தளத்தைப் பற்றிச் சில...


எனது இந்த முயற்சியானது தரம் 10,11மற்றும்12 வகுபபுக்களில் ICT பாடத்தினை கற்கின்ற மாணவர்களுக்கும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் முழுமையான பயன் பெறுவதற்காகும்.மற்றும் தமது சந்தேகங்கள் மேலதிக தேவைகள் முதலியவற்றை எம்மோடு பரிமாறி பயன்பெறக்கூடிய வகையிலும் இம்முயற்சி உதவக்கூடியது என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் இத்தளத்தினை முழுமையாக நீங்கள் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி