Asymmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.
Blog : web Log என்பதன் சுருக்கமே. இதனை ஒன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்றதே. இணைய தள
வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை Blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன.
Browser: இணைய சேவைகளில் ஒன்றான உலகளாவிய வலைத் தளமான www ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே
பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம் : இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்.