எனது இத்தளத்தைப்பற்றிச் சில...

எனது இந்த முயற்சியானது தரம் 10,11மற்றும்12,13 வகுபபுக்களில் ICT மற்றும் GIT பாடங்களைக் கற்கின்ற மாணவர்களுக்கும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் முழுமையான பயன் பெறுவதற்காகும்.மற்றும் தமது சந்தேகங்கள் மேலதிக தேவைகள் முதலியவற்றை எம்மோடு பரிமாறி பயன்பெறக்கூடிய வகையிலும் இம்முயற்சி உதவக்கூடியது என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் இத்தளத்தினை முழுமையாக நீங்கள் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்துத் தேவை ஏற்படின் தரப்பட்ட இணைப்பினைப் பயன்படுத்தி Bamini அல்லது Latha எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பார்வையிடலாம்.
நன்றி

இன்று

*** Grade 10 & O/L ICT Classes Available Click for Application form தரம் 10 மற்றும் O/L வகுப்புக்கள் ஆரம்பம்.விண்ணப்பங்களுக்கு இங்கே click செய்க *** GCE(O/L) Marking Scheme 2009 *** GCE(O/L) Marking Scheme 2010***GCE(O/L) Marking Scheme 2011***GCE(O/L) Marking Scheme 2012

Thursday, November 22, 2012

Browser's Shortcut Keys

அனைத்து பிரவுசர்களுக்குமான Shortcut Keys கணிணிக்குறிப்புக்கள்

அனைத்து பிரவுசர்களுக்குமான Shortcut Keys
ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழி முறை களையும் வைத்துள்ளன. இதற்கான Shortcut Key தொகுப்புகளும் அந்த பிரவுசருக்கே உரித்தானவையாக இருக்கும். இருப்பினும் பல Shortcut Keys, அனைத்து பிரவுசரிலும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந்துள்ளன. இவற்றைத் தெரிந்து


கொண்டால் நாம் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேக மாகவும் செயல்பாடு களை மேற்கொள்ளலாம். அத்தகைய Shortcut Keys தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
1.டேப்களுக்கான சில ஷார்ட்கட் கீகள்:
Ctrl+1-8– இடமிருந்து வலமாக, எண்ணுக் கேற்றபடியான டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்லும்.
Ctrl+9 – கடைசி டேப்பிற்குச் செல்லும்.
Ctrl+Tab – அடுத்த டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது இருக்கும் டேப்பிற்கு வலதுபுறம் உள்ள டேப்பிற்குச் செல்லும்.
இந்த செயல்பாட்டினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தவிர, மற்ற பிரவுசர்களில் Ctrl+Page Upகீ தொகுப்பு செயல்படுத்தும்.
Ctrl+Shift+Tab –முந்தைய டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது உள்ள டேப்பிற்கு இடது புறம் உள்ள டேப்பிற்குச் செல்லும். இந்த செயல்பாட்டினை, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தவிர, மற்ற பிரவுசர்களில் Ctrl+Page Down கீ தொகுப்பு செயல்படுத்தும்.
Ctrl+W, Ctrl+F4– அப்போதைய டேப்பினை மூடும்.
Ctrl+Shift+T– இறுதியாக மூடிய டேப்பினைத் திறந்து தளத்தைக் காட்டும். இப்படியே இந்த கீகளை அழுத்த, அழுத்த, முந்தைய மூடப்பட்ட டேப்களில் உள்ள தளங்கள் திறக்கப்படும்.
Ctrl+T– புதிய டேப் திறக்கப்படும்.
Ctrl+N– புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறக்கப்படும்.
Alt+F4– அப்போதைய விண்டோ மூடப் படும். பிரவுசர்களில் மட்டுமின்றி, அனைத்து அப்ளிகேஷன்களிலும் இந்த கீ தொகுப்பு, இதே செயல்பாட்டினை மேற்கொள்ளும்.
2. மவுஸ் சார்ந்த ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:
Middle Click a Tab– டேப்பில் கர்சரைக் கொண்டு சென்று, மவுஸின் நடுமுனை யைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.
Ctrl+Left Click, Middle Click –பின்னணியில் இயங்கும் டேப்பில், லிங்க் ஒன்றைத் திறக்கும்.
Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, அதற்கான தளம் புதிய பிரவுசர் விண்டோவில் திறக்கப்படும்.
Ctrl+Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, தொடர்புடைய தளம் புதிய முன்புறமான டேப்பில் திறக்கப்படும்.
3. பிரவுசரில் உலா வருதல்:
Alt+Left Arrow, Backspace– பின் நோக்கிச் செல்ல.
Alt+Right Arrow, Shift+Backspace – முன் நோக்கிச் செல்ல.
F5– மீண்டும் தொடக்கத்திலிருந்து தளத்தை இறக்கித் தர.
Shift+F5 – தளத்தை இறக்குவதுடன், கேஷ் மெமரியை ஒதுக்கித் தரும். இணைய தளம் முழுமையும் புதியதாக இறக்கித் தரப்படும்.
Escape – தளம் இறக்கம் செய்வது உடனடியாக நிறுத்தப்படும்.
Alt+Home – ஹோம் பேஜ் எனக் குறிக்கப்பட்ட தளம் திறக்கப்படும்.
4. பெரிதாக்குதல்:
Ctrl and +, Ctrl+Mousewheel Up – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி பெரிதாக்கப்படும்.
Ctrl and -, Ctrl+Mousewheel Down – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி சிறிதாக்கப்படும்.
Ctrl+0 – மாறா நிலையிலான அளவில் தளம் காட்டப்படும்.
F11– மானிட்டரின் திரையில் முழுக் காட்சி காட்டப்படும்.
5. மவுஸ் உருளை உருட்டுதல்:
Space, Page Down– தளத்தின் ஒரு பிரேம் கீழாகச் செல்லும்.
Page Up– ஒரு பிரேம் மேலாகச் செல்லும்.
Home – தளத்தின் பக்கத்தின் தொடக்கத்திற்குச் செல்லும்.
End – தளத்தின் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும்.
Middle Click – மவுஸ் கர்சர் வேகமாக, திருப்பும் திசைக்கேற்ப, கீழாகவோ, மேலாகவோ செல்லும்.
6. அட்ரஸ் பார்:
Ctrl+L, Alt+D, F6– அட்ரஸ் பாருக்கு கேர்சர் இயக்கம் செல்லும்; இதில் டைப் செய்திட ஏதுவாக.
Ctrl+Enter – www. என்பதை முன்னாலும், .com என்பதனைப் பின்னாலும் இணைக்கும். எடுத்துக் காட்டாக, school என மட்டும் அட்ரஸ் பாரில் டைப் செய்திட்டால், www.school.org என மாற்றும்.
Alt+Enter – அட்ரஸ் பாரில் உள்ள முகவரிக்கான தளத்தினை புதிய டேப்பில் திறக்கும்.
7. தேடல்:
Ctrl+K, Ctrl+E – பிரவுசரில் உள்ள சர்ச் பாக்ஸ் உள்ளே கர்சர் இயக்கம் செல்லும். பிரவுசருக்கென சர்ச் பாக்ஸ் இல்லை என்றால், அட்ரஸ் பாருக்குச் செல்லும்.
(இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், Ctrl+K செயல்படுவதில்லை; அதற்குப் பதிலாக அதே செயல்பாட்டினை Ctrl+E என்ற கீகள் செயல்படுத்தும்)
Alt+Enter – புதிய டேப் திறக்கப்பட்டு, சர்ச் பாக்ஸில் தேடல் தொடங்கும்.
Ctrl+F, F3 – அப்போதைய பக்கத்தில் தேடலைத் தொடர, அந்தப் பக்கத்தில் உள்ள சர்ச் பாக்ஸைத் திறக்கும்.
Ctrl+G, F3 – தேடப்படும் சொல் இடம் பெறும் அடுத்த இடம் கண்டறியப்படும்.
Ctrl+Shift+G, Shift+F3– தேடப்படும் சொல் இடம் பெறும் முந்தைய இடம் கண்டறியப்படும்.
8. ஹிஸ்டரி மற்றும் புக்மார்க்ஸ்:
Ctrl+H – பிரவுசிங் ஹிஸ்டரி திறக்கப் படும்.
Ctrl+J– டவுண்லோட் ஹிஸ்டரி திறக்கப் படும்.
Ctrl+D – அப்போதைய இணையதளம் புக்மார்க் செய்யப்படும்.
Ctrl+Shift+Del – பிரவுசிங் ஹிஸ்டரியை அழிப்பதற்கான விண்டோ திறக்கப்படும்.
9. மற்ற செயல்பாடுகள்:
Ctrl+P– அப்போதைய தளப் பக்கத்தினை அச்செடுக்கும்.
Ctrl+S – உங்கள் கம்ப்யூட்டரில், அப்போதைய தளம் பைலாகப் பதியப்பட்டு சேவ் செய்யப்படும்.
Ctrl+O –உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் திறக்கப்படும்.
Ctrl+U– அப்போதைய தளப்பக்கத்திற்கான, சோர்ஸ் கோட் (source code) திறக்கப்படும். (இது இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் திறக்கப்பட மாட்டாது).
F12 – டெவலப்பர்களுக்கான டூல் பாக்ஸ் திறக்கப்படும். (Shortcut Key பயர்பாக்ஸ் பிரவுசரில் செயல்படாது.)
(நன்றி tamilcnn)

No comments:

Post a Comment