எனது இத்தளத்தைப்பற்றிச் சில...

எனது இந்த முயற்சியானது தரம் 10,11மற்றும்12,13 வகுபபுக்களில் ICT மற்றும் GIT பாடங்களைக் கற்கின்ற மாணவர்களுக்கும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் முழுமையான பயன் பெறுவதற்காகும்.மற்றும் தமது சந்தேகங்கள் மேலதிக தேவைகள் முதலியவற்றை எம்மோடு பரிமாறி பயன்பெறக்கூடிய வகையிலும் இம்முயற்சி உதவக்கூடியது என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் இத்தளத்தினை முழுமையாக நீங்கள் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்துத் தேவை ஏற்படின் தரப்பட்ட இணைப்பினைப் பயன்படுத்தி Bamini அல்லது Latha எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பார்வையிடலாம்.
நன்றி

இன்று

*** Grade 10 & O/L ICT Classes Available Click for Application form தரம் 10 மற்றும் O/L வகுப்புக்கள் ஆரம்பம்.விண்ணப்பங்களுக்கு இங்கே click செய்க *** GCE(O/L) Marking Scheme 2009 *** GCE(O/L) Marking Scheme 2010***GCE(O/L) Marking Scheme 2011***GCE(O/L) Marking Scheme 2012

Saturday, February 2, 2013

இணையம் சார்ந்த சில கலைச்சொற்களும் விளக்கமும்



A
symmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.

Blog : web Log என்பதன் சுருக்கமே. இதனை ஒன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்றதே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை Blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன.

Browser: இணைய சேவைகளில் ஒன்றான உலகளாவிய வலைத் தளமான www ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம் : இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்.

இணையம்(Internet)


உலகின் மிகப் பெரிய கணினி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.

ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.
பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.