எனது இத்தளத்தைப்பற்றிச் சில...

எனது இந்த முயற்சியானது தரம் 10,11மற்றும்12,13 வகுபபுக்களில் ICT மற்றும் GIT பாடங்களைக் கற்கின்ற மாணவர்களுக்கும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் முழுமையான பயன் பெறுவதற்காகும்.மற்றும் தமது சந்தேகங்கள் மேலதிக தேவைகள் முதலியவற்றை எம்மோடு பரிமாறி பயன்பெறக்கூடிய வகையிலும் இம்முயற்சி உதவக்கூடியது என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் இத்தளத்தினை முழுமையாக நீங்கள் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்துத் தேவை ஏற்படின் தரப்பட்ட இணைப்பினைப் பயன்படுத்தி Bamini அல்லது Latha எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பார்வையிடலாம்.
நன்றி

இன்று

*** Grade 10 & O/L ICT Classes Available Click for Application form தரம் 10 மற்றும் O/L வகுப்புக்கள் ஆரம்பம்.விண்ணப்பங்களுக்கு இங்கே click செய்க *** GCE(O/L) Marking Scheme 2009 *** GCE(O/L) Marking Scheme 2010***GCE(O/L) Marking Scheme 2011***GCE(O/L) Marking Scheme 2012

Saturday, November 2, 2013

QR Code என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது?


QR Code என்றால் என்ன
QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலக நாட்டினர் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாகும்.
Bard code & QR code

Bar Code
பற்றிய நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்போம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியே QR Code ஆகும்.


QR Code-ம் பயனும்: 


1. QR Code Image ஆக மாற்றுவதன் மூலம் உங்களுடைய தகவல்கள் அல்லது இணைப்புகள் உங்களுடைய தகவல்கள் QR Code ஆக என்கோட் (Encode) செய்யப்பட்டு ஒரு படமாக கிடைக்கும்.
2. அப்படத்தை உங்களுக்கு வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
3. நண்பர்களுக்கு அனுப்பியும் அவற்றை Decode செய்து பயன்படுத்த முடியும்.
4. அதாவது ஒரு தகவலை QR Code ஆக என்கோட் செய்யப்பட்டு கிடைக்கும் படத்தை மீண்டும் ஸ்கேன் செய்து (டீகோட் Decode)செய்து , அதில் மறைந்துள்ள தகவல்களைப் பெற முடியும்.
5. உங்களுடைய தகவல்கள் தமிழ்மொழி உட்பட எம்மொழியில் இருந்தாலும், இந்த முறையில் தகவல்களை QR Code ஆக மாற்றி, மீண்டும் தேவையானபோது Decode செய்து பெற முடியும்.

QR Code Image - ல் என்னென்ன தகவல்களைப் பயன்படுத்த முடியும்.?
QR Code -ல் இணையதளச்சுட்டிகளை (Websites links) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள், வலைத்தள முகவரிகள், SMS என்பன போன்ற ஐந்து வரிக்கு மிகாமல் இருக்கும் Data க்களை QR Code படமாக மாற்ற முடியும்.

QR Code Image - ஐ உருவாக்குவது எப்படி

QR Code Image -ஐ உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய இணையதளங்கள் (Online QR Code Websites) உள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு தளத்திற்கு சென்று நீங்கள் உருவாக்க விருக்கும் இணைப்பு அல்லது தகவல்களை அதில் உள்ளிட்டு, QR Code Image - இமேஜைப் பெற முடியும். இது முற்றிலும் இலவசமே..QR Code Image உருவாக்க இலவச மென்பொருள்களும் உள்ளன. அம்மென்பொருளைப் பயன்படுத்தியும் QR Code Image ஐ உருவாக்கம், QR Code Image -ல் உள்ளதை Decode செய்து படிக்கவும் முடியும்.
QR Code உருவாக்கப் பயன்படும் மென்பொருள்: 

1. Download QR Code Generator Software
2.
 Download QR Code Generator Software
3.
 Download QR Code Generator Software

உடனடியாக Online-ல் QR Code உருவாக்கப் பயன்படும் இணையதளங்கள்:

1. http://createqrcode.appspot.com/
2. http://keremerkan.net/qr-code-and-2d-code-generator/
இதுபோன்று நிறைய இணையத்தளங்கள் உள்ளன.
உருவாக்கப்பட்ட QR Code - Decode  செய்து தகவலைப் படிப்பது எப்படி

இதற்கு QR Code Reader என்ற மென்பொருள் பயன்படுகிறது. இணையத்தில் QR Code Reader வலைத்தளங்களும் உள்ளன.

இந்த தளத்திற்குச் சென்று http://www.onbarcode.com/scanner/qrcode.htmlஉங்களுடைய QR Code Image - உள்ளிட்டு, அதில் உள்ள தகவல்களைப் பெற முடியும்.

QR Code Reader மென்பொருள் (Software) மூலமும் QR Code Image உள்ளவற்றை படித்து அவற்றைப் பயன்படுத்த முடியும்.

இம்மென்பொருளைப் பயன்படுத்தி QR Code உருவாக்க முடியும். உருவாக்கிய QR Code Image - படிக்கவும் முடியும்.

No comments:

Post a Comment