BIOS என்றால் என்ன?
கணினியை இயங்க ஆரம்பித்ததும் Browser இனால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு programme (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும். அதன் மூலம். நினைவகம், Hard disk, மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். BIOS ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. Hard disk இல் சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் programme ஆனது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் Read Only Memory எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை On செய்ததும் கணினியைக் கட்டுப்படுத்தி பின்னர் Hard disk இலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்து வைக்கிறது . இதனை Firmware எனவும் அழைப்பதுண்டு. ஏனெனில் இதில் நாம் மாற்றங்கள் செய்ய முடியாது.
கணினியில் BIOS ற்கு பல பணிகள் வழங்கப் பட்டிருந்தாலும் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைப்பதே அதன் முக்கிய பணியாகும். கணினியை இயக்கியதும் BIOS ஆனது Processor இற்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன்பொருள்களும் முறையாகக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதானை செய்து கொள்ளும். இதனை Power On Self Test (POST) எனப்படுகிறது Hard disk, CD ROM போன்றவற்றை இனம் காணுதல், நினைவகத்தின் அளவை சோதித்தல், Processor இன் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்க்ஸ் என்பவற்றை நிர்வகித்தல். Graphics Card, Sound Card போன்ற எனைய சாதனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் இது போனற வேறு BIOS சிப்புகளை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன..
bios கணினியை இயக்கியதும் ஆரம்பிகும் BIOS Programme உடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிவகித்தல் (Power Management), மற்றும் எந்த Driver இலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன.
திகதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் settings விவரங்களை Battery மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ் எனப்படுகிறது.
BIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றன்ர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. .
BIOS என்பது கணினியை இயக்கும் அதேவேளை திகதி, நேரம் மற்றும் settings விவரங்களை BIOS சேமித்து வைக்குமிடமே CMOS எனும் சிப்பாகும். CMOS என்பது ஒரு வகை நினைவகம்,.
CMOS இல் மாற்றங்கள் செய்ய கணினியை On செய்தவுடனேயே Keyboard இல் குறித்தத ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்த்துமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும். CMOS Setup இல் நுளைந்த்துமே CMOS கணினிப் பயனருக்குப் பல தெரிவுகளைச் செய்ய அனுமதிக்கிறது. திகதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த Drive இலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது Boot செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence) , Password setting, Memory settings. மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல settings களை மாற்ற்ரியமைக்கக் கூடிய வசதியைத் தருகிறது.
BIOS Programme ஐக் காலத்துக்குக் காலம் புதுப்பிக்கவும் (update) முடியும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காண வேண்டுமானால் அந்த BIOS ஐ வடிவமைத்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அதன புதிய பதிப்பை Download செய்து கொள்ள வேண்டும். BIOS ஐ Update செய்வதற்குரிய Utilities உம் அதனுடன் இணைந்து வரும். Utility Programme ஐயும் Update File களையும் ஒரு Pen drive இல் பிரதி செய்து Pen drive வை கணினியில் நுளைத்து இயக்க பழைய BIOS File களை அழித்து புதிதாக நிறுவிக் கொள்ளலாம். . எனினும் BIOS Update செய்வதில் கூடிய கவனம் தேவை.
தற்போது கணினிகளில் BIOS Update செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது. எனினும் பழைய கணினிகளிலுள்ள BIOS Chip தற்போது பாவனையிளுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் BIOS ஆனது அதன் ROM Chip ஐ மாற்றுவதன் முலமே Update செய்யப்பட்டது. எனினும் தற்போது EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory) எனும் Memory Chip இலேயே சேமிக்க்கப்படுவதால ROM Chip ஐ மாற்றாமலேயே தேவையேற்படின் பயஸ் ஐ Update செய்து கொள்ள லாம்.
எனது இத்தளத்தைப்பற்றிச் சில...
நன்றி
thank u so much
ReplyDelete